கந்தபுரம் உடையார் சுவாமி கொடைவிழா
உடன்குடி கந்தபுரம் உடையார் சுவாமி கொடைவிழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள கந்தபுரம் உடையார் சுவாமி கோவில் வருடாந்திர கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலை 7 மணிக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர், அதிகாலை 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், சாமக்கொடை பூஜையும் அதைத் தொடர்ந்து சுவாமிக்கு படையல் போட்டு வழிபாடு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 2-ம் நாள் காலை 10 மணிக்கு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.