காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.30 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.30 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2023-09-28 10:45 GMT

உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஒரு மாதத்துக்கு பின்பு 2 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. .அதில் ரூ.30 லட்சத்து 33 ஆயிரத்து 488 இருந்தது. 120 கிராம் தங்கமும் , 185 கிராம் வெள்ளியும் இருந்தது. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் சேவா அமைப்பினரால் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. பின்னர் அந்த தொகை வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது.

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் 6 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அறநிலையத்துறை ஆய்வாளர் திலகவதி மற்றும் கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன் ஆகியோர் தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 459 இருந்தது. தங்கம் 25.800 கிராமும், வெள்ளி 298.400 கிராமும் இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்