காஞ்சி சங்கர பகவதி வித்யாலயாபள்ளிவிளையாட்டு விழா
காஞ்சி சங்கர பகவதி வித்யாலயாபள்ளிவிளையாட்டு விழா நடந்தது.
தட்டார்மடம்:
காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுவிழா நடந்தது. பள்ளி முதல்வர் தேவி சுஜாதா ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கொம்மடிக்கோட்டை துணை பதிவாளர் ராமசந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். பஞ்சாயத்துத் தலைவி ராஜ புனிதா ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். விழாவில் கொம்மடிக்கோட்டை சு. சந்தோஷ நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வியாசிரியர் சித்திரை குமார், பள்ளி செயலாளர் சுந்தரலிங்கம், துணை செயலாளர் காசியானந்தம் மற்றும் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.