குன்னூர் அருகே காஞ்சி காமாட்சியம்மன் கோவில் திருவிழா

குன்னூர் அருகே காஞ்சி காமாட்சியம்மன் கோவில் திருவிழா

Update: 2023-05-10 01:00 GMT

குன்னூர்

குன்னூர் அருகேயுள்ள ஓட்டுப்பட்டறையில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 32- ம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 27 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் இறுதி நாள் நிகழ்ச்சியான முளைப்பாரி கங்கையை அடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக கலந்து கொண்டனர். மேலும் தங்கள் எடுத்து வந்த முளைபாரியை கிராம எல்லை பகுதியில் வைத்து கும்மி அடித்து பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்