காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

Update: 2023-05-07 10:40 GMT

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு காஞ்சீபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி காஞ்சீபுரத்திலிருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கல், தூசி, கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டு அருளியபடி அய்யங்கார் குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பச்சை கரை வெண்பட்டு உடுத்தி திருவாபுரங்கள் மல்லிகை பூ செண்பகப்பூ மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு அய்யங்கார்குளம் அருகே பூமிக்கு அடியில் உள்ள 20 அடி ஆழத்தில் ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து படிகள், தூண்கள் அமைந்துள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்