காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் மூழ்கி புகைப்பட கலைஞர் சாவு

காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் மூழ்கி புகைப்பட கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-24 08:49 GMT

காஞ்சீபுரத்தை அடுத்த சாலபோகம் சுப்புலட்சுமி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50), இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், கவுசிக், மித்ரன் என 2 மகன்கன் உள்ளனர். நாகராஜ் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள ஸ்டூடியோவில் புகைப்பட கலைஞராக வேலை செய்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுமித்ரா இவரிடம் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நாகராஜ் கீழ்கதிர்பூர்- பிள்ளையார் பாளையம் வேகவதி ஆற்றில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்