அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-23 08:30 GMT

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில், வந்தவாசி சாலையில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் 40 மாணவியர்கள் தங்கி பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த விடுதியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது விடுதியில் இரவு தங்குவதற்காக 4 கல்லூரி மாணவிகள் மட்டும் இருந்தனர். அப்போது கல்லூரி மாணவிகளுக்கு இரவு உணவு தயாரிக்காமல் மதியம் தயாரிக்கப்பட்ட உணவு, கூட்டு, பொரியல் இரவு உணவாக வழங்க வைத்திருந்தது தெரியவந்தது. இரவு தங்கியுள்ள மாணவிகளுக்கு உடனடியாக இரவு உணவு தயார் செய்து வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், இதற்கு காரணமான விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், ஓரிக்கையில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். இதில் சமையல் அறை மற்றும் உணவு சாப்பிடும் அறை போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்