கனகாம்பரம் கிலோ ரூ.930-க்கு ஏலம்

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.930-க்கு ஏலம் போனது.

Update: 2022-05-30 17:43 GMT

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.665-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.77-க்கும், பட்டுப்பூ ரூ.81-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.930-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்