கனகதுர்க்கை அம்மன் கோவில் கொடை விழா

சிவந்தியாபுரம் கனகதுர்க்கை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2022-08-10 20:02 GMT

இட்டமொழி:

சங்கனாங்குளம் பஞ்சாயத்து சிவந்தியாபுரம் கனகதுர்க்கை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதையொட்டி சிலம்பக்கலை மற்றும் வாள் விளையாட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கோவில் முன் பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். பின்னர் ஊர் எல்லையில் முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள் மங்கல குலவையிட்டு மேளதாளத்துடன் சுவாமியை ஊர்வலமாக கோவிலுக்குள் அழைத்து வந்தனர். தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடை விழாவில் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற சிவந்தியாபுரம் மாணவ-மாணவிகளின் வாள் விளையாட்டு, சிலம்ப விளையாட்டு போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

Tags:    

மேலும் செய்திகள்