கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம்

கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம் நடந்தது

Update: 2023-07-29 19:15 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ராதிகா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலர் செட்டிநாடு பாலு தரப்பில் இருந்து இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய்களை சீரமைத்து முன்னேற்பாடு பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த பேரூராட்சி தலைவர் பேரூராட்சி பகுதியில் எங்கும் தண்ணீர் தேங்காத வண்ணம் ஆங்காங்கே உள்ள கால்வாய்களை குடிமராமத்து செய்து சீரமைக்கப்படும். மேலும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மக்கள் நல பணிகளை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். அதன் பின்னர் தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்