கம்பம் நகராட்சி கூட்டம்
கம்பம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கம்பம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நகராட்சி தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 143 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். துப்புரவு பணி மேற்பார்வையாளரை வேறு டிவிசனுக்கு மாற்றப்படும் போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர். இதையடுத்து தங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் கூறினர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், சுகாதார அலுவலர் அரசக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.