மூதாட்டியை மிரட்டி கம்மல் பறிப்பு

மூதாட்டியை மிரட்டி கம்மல் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-26 19:23 GMT

திருவெறும்பூரை அடுத்த பழங்கனாங்குடி ஊராட்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 65). இவரது மனைவி முனியம்மாள் (60). நேற்று இவர் விறகு பொறுக்குவதற்காக காட்டுப்பகுதி சென்றார்.

அப்போது, அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் முனியம்மாளை மிரட்டி அவர் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து முனியம்மாள் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்