கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ஆட்ேடாவில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-05 16:16 GMT

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் போலீசார் கம்பம்-கூடலூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ஆட்டோ, மோட்டார்சைக்கிளில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தியதில், அவர்கள் கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த ராஜா (வயது 28), உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (28), என்பதும், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கோம்பை ரோடு தெருவை சேர்ந்த லதா (44) என்பவரை தேடி வருகின்றனர். ஆட்டோ, மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்