காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தளவாப்பாளையம், பிலீப்நகரில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா 2 நாட்கள் நடைபெற்றன. இதையொட்டி முதல்நாள் பக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. 2-வது நாளாக அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு விளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கருப்பண்ண சாமிக்கு கிடாவெட்டு பூஜை நடந்தது. மாலையில் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வாண வேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.