காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்

ஆலங்குளத்தில் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-30 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சிலை அமைப்புக்குழு தலைவர் ஜான்ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காமராஜ், அலெக்ஸ், பர்வீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக பொ.சிவபத்மநாதன் ரூ.1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் அனைத்துக் கட்சி, அமைப்புகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்