காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
சுரண்டையில் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாடார் வாலிபர் சங்க தலைவர் ஏ.கே.எஸ்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே.டி.பாலன், நிர்வாகிகள் ஆர்.வி.ராமர், ராஜ், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் அகாடமி பேராசிரியர் சார்லஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நாடார் வாலிபர் சங்க கௌரவ தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி.கணேசன் கலந்துகொண்டு காமராஜர் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் அண்ணாமலைக்கனி, சி.எம்.சங்கர், ஜெகன், ஆர்.எம்.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.