சேரன்மாதேவி:
காமராஜர் நினைவு தினத்தையொட்டி, சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு சேரன்மாதேவி நாடார் உறவின்முறை சங்க தலைவர் தேவதாசன் ரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சக்திவேல், ராஜாராம், சாமுவேல் செல்வின், சவுந்தர்ராஜன், ஜெபமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் பொன்ராஜ், செயலாளர் முருகன், கவுன்சிலர் ஆனி மற்றும் வீரபாண்டி, சேக் முகமது, செய்யது அலி, காஜா மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.