காமராஜர் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம்

ஆத்தூரில் காமராஜர் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-10-14 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இதில் மன்றத்திற்கான அமைப்பு விதிகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும் நற்பணி மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஏ.செல்வமணி, செயலாளராக எஸ்.முத்துக்குமார், பொருளாளராக எஸ். ராம்குமார், துணை தலைவராக ஜி.அசோக்குமார், துணை செயலாளராக ஜே.பிரகாஷ், ஆலோசர்களாக கே.முருகேசன், எஸ்.ஏசுதாஸ், மற்றும் 20 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்