காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

வாசுதேவநல்லூரில் காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-07-03 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் காமராஜர் திருமண மண்டபத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பேச்சு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.டி.கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

விழாவில் காந்தி சேவா அறக்கட்டளை நிறுவனர் தவமணி, சுமங்கலி சமுத்திரவேலு, நாடார் மகாஜன சங்க நெல்லை மண்டல செயலாளர் மதன் எம்.சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் சாமுவேல் மனோகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் காளியப்பன், குருநாதன், பஞ்சாங்கம், முருகேசன், ஆதிமூலம் மற்றும் எஸ்.வி.என். கல்லூரி செயற்குழு உறுப்பினர் அகஸ்டின் தனபால், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி இணை செயலாளர் என்.எம்.எஸ்.விவேகானந்தன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்க தென்காசி மாவட்ட செயலாளர் குறிஞ்சி மகேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்