ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : காங்கிரசுக்கு கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Update: 2023-01-25 07:16 GMT

சென்னை,

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ, ஈ.பி.எஸ, அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தலின் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அக்கட்சியன் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

காங்கிரஸ் கட்சிக்கு ஏகமனதாக தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வோம். மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் இளங்கோவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கிறோம். மிகப்பெரிய வெற்றி பெற்று மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் வரலாற்று மிக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். எனக்கு எம்.பி ஆகும் ஆசையை விட, மக்களுக்கு பணி செய்வது தான் ஆசை  என்றார். 

சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்