சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான் - கமல்ஹாசன்
தமிழகம் முழுவதும் துரிதமாக ரத்தம் வழங்கும் திட்டத்தை கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை:
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாளை (14-ந்தேதி) மக்கள் நீதி மய்யம் சார்பாக, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல்ஸ் பிளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
இதனை இன்று காலை 11 மணியளவில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான். நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை.
இது போல் நம்மவர் படத்தில் ரத்தம் கொடுப்பது தொடர்பான காட்சிகளை குறிப்பிட்டு ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.