கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து நடிகை ரம்யா உருக்கம்

உங்களை போல் வேறு யாரும் இல்லை என்று நடிகை ரம்யா கூறியுள்ளார்.

Update: 2024-12-12 01:49 GMT

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான சோமனஹள்ளியில் முழுஅரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து நடிகை ரம்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.எம்.கிருஷ்ணா உயர்ந்த மனிதர். எப்போதும் எல்லா உணர்வுகளிலும் அரசியல்வாதி அல்ல. அவர் யாரையும் வெறுக்கவில்லை. தனது போட்டியாளர்களை கூட வெறுக்கவில்லை.

நீங்கள் ஒரு தொலை நோக்கு பார்வை, பொறுமை, கருணை உள்ளம், நன்றாக பேசுபவர், படித்தவர், நகைச்சுவையான ஆளுமை. உங்களை போல் வேறு யாரும் இல்லை. அனைத்துக்கும் நன்றி. இப்போது நீங்கள் உங்கள் சிறந்த நண்பருடன் இருக்கீர்களா." என கூறி இதய இமோஜியை பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்