மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படத்தின் அப்டேட்

சமீபத்தில் ‘குடும்பஸ்தன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

Update: 2024-12-12 02:27 GMT

சென்னை,

'காதலும் கடந்து போகும்', 'காலா', 'விக்ரம் வேதா' போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். 'ஜெய் பீம்' திரைப்படத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியானது. இளைய தலைமுறையிடம் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார்.

தற்போது, 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூட்யூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று (12-ந் தேதி) இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்