'அகமெல்லாம் மலரட்டும்' - நடிகர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து

தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும் என நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-12 03:18 GMT

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

விடிவானில் ஒளிர்மீன்கள்

விண்ணெல்லாம் ஒளிரட்டும்

ஐப்பசியின் மழைப்பொழிவில்

அகமெல்லாம் மலரட்டும்

ஆகாயம் பார்த்திருக்கும்

அருமைநிலம் செழிக்கட்டும்

தீபாவளி நாளில்

திசையெட்டும் பொலியட்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்