கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2022-11-06 18:45 GMT

தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு புதுக்கோட்டை சூசையப்பர் பட்டணத்தில் மருத்துவ முகாம் மற்றும் சிறுவர் விளையாட்டு திடலில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல வக்கீல் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் அக்பர், பொருளாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நற்பணி இயக்க முன்னாள் பொறுப்பாளர் ஏ.டி.பிராங்கிளின், வக்கீல் பிரிவு ராஜா,

மாநகர செயலாளர் சேர்மதுரை,

சிசில்குமார், நற்பணி இயக்க மாநகர அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ராபர்ட் செய்து இருந்தார்.

இதே போன்று சுந்தரம் அருள்ராஜ் ஆஸ்பத்திரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணி நெல்லை மண்டல பொறுப்பாளர் எம்.கே.ராஜன் தொடங்கி வைத்தார். முகாமில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை தொழிலாளர் அணி தூத்துக்குடி மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்