கள்ளபிரான் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-10-20 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8 மணிக்கு மூலவர் சுவாமி வைகுண்டநாதனுக்கு பால் திருமஞ்சனம், காலை 9 மணிக்கு உற்சவர் ஸ்ரீகள்ளப்பிரான் சுவாமி, தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பின்னர் திருமஞ்சனம் நாலாயிர திவ்விய பிரபந்த சேவை கோஷ்டி நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு தாயார் வைகுண்டநாயகி பல்லக்கில் அலங்கரித்து இரவு 7 மணிக்கு எழுந்தருளி கொடிமரம் சுற்றி புறப்பாடும், இரவு 7.30 மணிக்கு தாயார் வைகுண்டநாயகி சயனகுறட்டில் சுவாமி கள்ளப்பிரான் எழுந்தருளினார் தீபாராதனைக்கு, பின்பு தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்