கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்: சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு - ஐகோர்ட்டில் மனு

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-19 16:20 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கைதானவர்களில் அப்பாவிகளை அடையாளம் காணக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரத்தினம் என்பவம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபடாதவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர் கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும் அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமென்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்