கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுரை வழங்கியுள்ளாா்.

Update: 2022-11-14 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை மற்றும் கள்ளக்குறிச்சி சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது கலெக்டர் பேசுகையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14-ந்தேதி முதல்(அதாவது நேற்று) 20-ந்தேதி வரை குழந்தைகள் நட்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகளிடையே வெளிப்புற விளையாட்டு குறைந்துள்ளது. இதை ஊக்குவிக்கும் விதமாக ஸ்போர்ட்ஸ் பார் டெவலப்மெண்ட் என்ற மையக்கரு மூலமாக விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிப்புற விளையாட்டை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் தீபிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சைல்டு லைன் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்