கள்ளக்குறிச்சி: பள்ளியை சீரமைக்க அனுமதி கோரி வழக்கு : 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

10 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

Update: 2022-08-23 06:52 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 17-ந்தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன், அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கணியாமூர் வன்முறையில் சேதமடைந்த பள்ளியை சீரமைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க முடியாது தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.மேலும் பள்ளி தாளாளர் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால்.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பள்ளியை சீரமைக்க ,திறக்க அனுமதி தேவை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

10 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும் தனியார் பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி அப்துல் உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்