கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் 100 சதவீத கட்டண சலுகையில் பிளஸ்-1 படிக்க தகுதி தேர்வு

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் 100 சதவீத கட்டண சலுகையில் பிளஸ்-1 படிக்க தகுதி தேர்வு நடைபெற்றது.

Update: 2023-04-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 100 சதவீதம் சலுகை மற்றும் பல்வேறு சலுகையுடன் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்க தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 1,800 மாணவர்கள், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 200 பேர் மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 100 அறைகளில் தேர்வு எழுதினார்கள்.

தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருக்கு எல்.சி.டி. கூட்டரங்கில் 10-ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என ஆலோசனை மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெட்ரிக் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் கலந்து கொண்டு பள்ளியின் சிறப்புகள், மாணவ, மாணவிகளின் விடுதியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு, மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற சாதனைகள், நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பு சேர்க்கை குறித்து பேசினார். மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி, கவிஞர் நந்தலாலா, பேச்சாளர் ஜெகன் ஆகியோரை கொண்டு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்கள் தேர்வு எழுத வருவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்