கலைத்திருவிழா போட்டிகள்

Update: 2023-10-15 16:20 GMT


மடத்துக்குளத்தையடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தலைமையாசிரியர் சவுந்தர்ராஜன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றன. கலைத்திருவிழா போட்டியை உதவி தலைமை ஆசிரியர் ஜெய் சிங் மற்றும் நாகவேணி தொடங்கி வைத்தனர். இதில் கவின் கலை, நுண்கலை, நடனம், இசை நாடகம், மொழிப் பயிற்சி, ஓவியம், பறை இசை உள்ளிட்ட 32 வகையான போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவின் முடிவில் ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தஹிர் நன்றி கூறினார்

மேலும் செய்திகள்