கழுகுமலை வளனார் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

கழுகுமலை வளனார் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2023-08-09 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை - குருவிகுளம் சாலையில் உள்ள வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி டெய்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆய்குடி ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் இலக்கியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்