கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்தேரோட்ட பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தேரோட்ட பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 4-ந்தேதி நடக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் தலைமை தாங்கினார். கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் தேர் திருவிழா அன்று யாரும் மது அருந்தி வந்து தேர் இழுக்க கூடாது. மேலும் சாதி குறித்த பனியன்கள் அணிந்து வர கூடாது. தலையில் ரிப்பன் கட்டி கொண்டு ஆட கூடாது. பாதுகாப்பான முறையில் அனைவரும் ஒற்றுமையுடன் தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.