காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மெஞ்ஞானபுரம்:
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மதியம் சுவாமி, அம்பாள், ஜடாமுடி சித்தர், பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கோவில் கிரிவல பாதையில் ஓம் நமசிவாய மந்திர ஜெபம் சொல்லியவாறு வலம் வந்து வழிபாடு செய்தனர்.