கலச விளக்கு வேள்வி பூஜை
தூத்துக்குடியில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
தூத்துக்குடி தெர்மல் நகர் குடியிருப்பில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தணியவும், மின்உற்பத்தி மேலோங்கவும், மழைவளம், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் முருகன் பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு குரு பூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜை நடந்தது. பெண்கள் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி மலர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்திக்கு பக்தர்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் சக்தி பீட தலைவரும், உதவி செயற்பொறியாளருமான முருகேசன், செயற்பொறியாளர் ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் கண்ணன், வேள்விக்குழு தலைவர் கிருஷ்ணநீலா, மகளிர் அணி தலைவி கோவில்பட்டி பத்மாவதி, சக்தி பீட நிர்வாகிகள் இசக்கியப்பன், குற்றாலம் செந்தில்குமார், ஜெயபால், சீனிவாசன், முன்னாள் பொருளாளர் வடிவேல்ராஜன், மந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.