கலச விளக்கு வேள்வி பூஜை

கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-13 19:10 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் ஆடிப்பூரகஞ்சி வார்ப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாக குழு தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.தாமோதரக்கண்ணன் சக்தி கொடி ஏற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் ராமசாமி முன்னிலையில் வேள்வி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பேரூராட்சி கவுன்சிலர் சத்தியபாமா தாமோதரக்கண்ணன் தொடங்கிவைத்தார். இதையடுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பபட்டன. இதில் மாவட்ட நிர்வாக குழு துணைத்தலைவர் சத்தியசீலன், வட்டத்தலைவர் குமார், பிரசாரக் குழு தலைவர் சீதாபதி, ராமசாமி, ஆசிரியர் பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் விஜயராஜன், திருமலை, லட்சுமி செல்லையா, லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்