கலைஞர் மகளிர் உரிமை திட்டவிண்ணப்ப பதிவு முகாம்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்

Update: 2023-07-28 12:02 GMT

முத்தூர்

முத்தூர்-நத்தக்காடையூர் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

விண்ணப்ப பதிவு முகாம்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலசு அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை 10 மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முகாமில் இந்த விண்ணப்பம் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வரும் வருவாய்த்துறை அதிகாரிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் ஆகியோர்களிடம் நகர, கிராம பகுதி ஏழை -எளிய குடும்பத்தினர் அனைவருக்கும் விண்ணப்பங்களை வழங்கி கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உள்ள அனைவரிடமும் தவறாமல் விண்ணப்பங்கள் பெற்று சரியான முறையில் தங்கு தடையின்றி உரிய பயனாளிகள் பெயர் விடுபடாமல் பதிவு செய்யுமாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்

இதுபோல் நத்தக்காடையூர் ஊராட்சிக்குட்பட்ட பழைய வெள்ளியம்பாளையம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் மற்றும் எஜமானர் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.20 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வேளாண் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி ஆகியவற்றையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Tags:    

மேலும் செய்திகள்