கலாக்ஷேத்ரா - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சென்னை,
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை.
நேற்று நடைபெற்ற கலாக்ஷேத்ரா நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் என கலாக்ஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஹரி பத்மன் உட்பட 4 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கலாக்ஷேத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளது. எடுக்கப்பட்டுள்ள நடவடிக்களை கருத்தில் கொண்டு தேர்வுகளை எழுத வருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கலாக்ஷேத்ரா நிர்வாகம். மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.