கலைவாணி பள்ளி மாணவர்கள் சாதனை

வட்டார விளையாட்டு போட்டிகளில் கலைவாணி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;

Update: 2023-08-27 19:00 GMT

திருவேங்கடம்:

சங்கரன்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் திருவேங்கடத்தில் நடந்தது. இதில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு வாலிபால் போட்டியில் ஆண்கள்-பெண்கள் பிரிவில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் முதலிடம் பிடித்தனர். எறிபந்து போட்டியில் ஆண்கள்-பெண்கள் பிரிவில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் முதலிடமும், பால் பேட்மிண்டன் போட்டியில் ஜூனியர், சீனியர் பிரிவில் முதலிடமும், டென்னிக்காய்ட் போட்டியில் ஆண்கள் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவில் ஒற்றையார் ஆட்டத்தில் முதலிடமும், இரட்டையர் ஆட்டத்தில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவில் முதலிடமும், பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் முதலிடமும், இரட்டையர் ஆட்டத்தில் முதலிடமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி வி.பொன்னழகன் என்ற கண்ணன் உள்பட பலர் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்