கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

வியாகா கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-10-05 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் சட்டமன்ற நாயகர்-கலைஞர் விழாக்குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு ேபசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

முன்னாள் பேரவை செயலாளரும், குழு உறுப்பினருமான மா.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி இளவரசி, கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன், நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், செயலாளர் சுந்தர், கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை அலுவலர் சாந்தி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தலைமைச் செயலக துணை செயலர் நாகராஜன், இணை செயலாளர் சாந்தி, கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்