சந்தனகாப்பு அலங்காரத்தில் காலபைரவர்
சந்தனகாப்பு அலங்காரத்தில் காலபைரவர் காட்சி அளித்தாா்.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு வளர்பிறை அஷ்டமியையொட்டி 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தாா்.