காக்கங்கரை ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம்

ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காக்கங்கரை ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2023-03-13 18:50 GMT

கந்திலி ஒன்றியம் காக்கங்கரை ஊராட்சி மன்ற தலைவராக நந்தினி சீனிவாசன் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் காக்கங்கரை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆவல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் காக்கங்கரை பஞ்சாயத்துக்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்களை அலுவலகத்தில் வைக்காமல் வீட்டுக்கு எடுத்து செல்கிறார். வரி வசூல் செய்யும் பணத்தை வரவு வைக்காமல் மோசடி செய்து வருகிறார்.

ஊராட்சி மன்ற தலைவருக்கான முத்திரையை போலியாக செய்து ஊராட்சி செயலாளர் பயன்படுத்தி வருகிறார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்ததாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எம்.நேரு, துரை மற்றும் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதும் அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்