கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-20 19:24 GMT

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கைலாசநாதர் கோவில்

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.

28-ந் தேதி தேரோட்டம்

விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்