கடையநல்லூர் யூனியன் கூட்டம்

கடையநல்லூர் யூனியன் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-04-11 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் ராதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மணிகண்டன், கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், சத்தியகலா தீபக் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து போகநல்லூரில் ரூ.4½ லட்சத்தில் மயான நன்மை கூடம் அமைத்தல், புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிபட்டி தெற்கு தெரு, நாயக்கர் தெரு, முத்தாலம்மன் கோவில் மற்றும் புதுக்காலனியில் ரூ.17½ லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், புன்னையாபுரம் முந்தல் சாலையில் ரூ.8¾ லட்சத்தில் வாறுகால் அமைத்தல், திரிகூடபுரம் ஊராட்சி ராமகிருஷ்ணர் தெருவில் ரூ.4.23 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், பாத்திமா நகர் வடக்கு தெருவில் ரூ.6.86 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், காசிதர்மம் சுடுகாட்டில் ரூ.4½ லட்சத்தில் எரிமேடை அமைத்தல், குலையனேரி தேவர் வடக்கு தெருவில் ரூ.10.31 லட்சத்தில் சிமெண்டு தளம் அமைத்தல், சங்குபுரம் அப்துல் கலாம் நகரில் ரூ.4.32 லட்சத்தில் வாறுகால் அமைத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்