கடையநல்லூர்:
கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள்பால்ராஜ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மணிகண்டன், அருணாச்சல பாண்டியன் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.