கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்

கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-14 18:26 GMT

கடவூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் கைலாசம், ஒன்றிய ஆணையர்கள் மங்கையர்கரசி, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு-செலவு உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சாலை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழுத்தலைவர் பதில் அளித்து பேசினார். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்