மாநில கபடி போட்டி: தேனி மாவட்ட அணி முதலிடம் பிடித்து சாதனை-மதுரை 2-வது இடம் பிடித்தது

Update: 2023-01-09 18:45 GMT

தர்மபுரி:

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 68-வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி தர்மபுரி டான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 38 மாவட்டங்களை சேர்ந்த கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடியன. இந்த போட்டிகளில் தேனி மாவட்ட அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது. மதுரை மாவட்ட அணி 2-வது இடமும், சிவகங்கை மாவட்ட அணி 3-வதுஇடமும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு கேடையம் மற்றும் சான்றிதழ்களை வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வழங்கினார். விழாவில் பள்ளி தாளாளர் உதயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி அலுவலர்கள் தேன்மொழி, கருணாகரன், பள்ளி முதல்வர் ஜெயராஜ், துணை முதல்வர் குமரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்