முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி 18-ந்தேதி தொடங்குகிறது

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி 18-ந்தேதி தொடங்குகிறது

Update: 2023-02-14 12:44 GMT

வேலூர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி 18-ந்தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான வேலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குப் பதிலாக ஒன்றிய அளவில் நடத்தப்படுகிறது.

கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18-ந் தேதியும், குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 19-ந் தேதியும், காட்பாடியில் உள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20-ந் தேதியும், வேலூர் டான்பாஸ்கோ உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் 25-ந் தேதியும் மற்றும் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 26-ந் தேதியும் நடைபெறவுள்ளன.

ஒன்றியத்தில் முதலிடம், இரண்டாமிடம் பெறும் 2 அணிகள் வீதம் மொத்தம் 10 அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். பிற போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் ஏதும் இல்லை. போட்டி அட்டவணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்று வருவதற்கான சான்றிதழினை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்களிடமிருந்து பெற்று போட்டி நடைபெறும் இடத்தில் தவறாது சமர்ப்பித்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

ேமற்கண்ட தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்