இட்டமொழி:
பரப்பாடியில் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 25-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டபிள்யு.ராஜாசிங், த.காமராஜ், ஜெஸ்கர் ராஜா, ராமஜெயம், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.