சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவராக கே.ராஜன் தேர்வு

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவராக கே.ராஜன் தேர்வு.

Update: 2022-06-20 22:27 GMT

சென்னை,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ள 469 பேரில் 359 பேர் ஓட்டு போட்டனர். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.ராஜன் வெற்றி பெற்றார். அவரது தலைமையில் போட்டியிட்ட நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கே.ராஜன் 230 ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருவேங்கடம் 124 ஓட்டுகள் பெற்றார். செயலாளராக கே.காளையப்பன், துணைத் தலைவராக எஸ்.நந்தகோபால், பொருளாளராக பி.முரளி, இணைச் செயலாளராக சாய் என்கிற சாய்பாபா ஆகியோர் தேர்வானார்கள்.

செயற்குழு உறுப்பினர்களாக மெட்ரோ ஜெயகுமார், கிருஷ்ணன், சந்திரன், பிரபுராம்பிரசாத், தியாகு, பன்னீர்செல்வம், மனோகர், சொக்கலிங்கம் ஆனந்தன், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, ராஜா ரகீம். குரோம்பேட்டை பாபு, கருணாகரன், நானி செல்வம் ஆகியோர் வெற்றி வாகை சூடினர்.

Tags:    

மேலும் செய்திகள்